சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி,  நான் வந்துட்டு இருக்கும்போது ஒரு சில இடத்தில் டிராக்டர் மூலமா தண்ணீரை எடுத்துக் கொண்டு இருக்காங்க. அந்த டிராக்டருக்கு டீசல் கொடுக்கல…. எதற்காக நீங்கள் இயக்காம இருக்கீங்க என நின்னு போன டிராக்டரிடம் கேட்டோம்?  டீசல் கொடுக்கல என்கிறார்கள்…  இரண்டு மூன்று இடத்தில் டீசல் இல்லாம நிக்குது… அப்படிப்பட்ட நிர்வாக திறமையைச் அரசாங்கம் தான் இந்த அரசாங்கம். அதோட அண்ணா திமுக ஆட்சியில் பல புயலை நாங்கள் பார்த்தோம்..

ஒரு புயல் இல்லை…. ரெண்டு புயல் இல்லை…. தானே புயலை பார்த்தோம்,உடனுக்குடன் நாங்கள் நிறைவேற்றிக் கொடுத்தோம். வர்த்தா சூறாவளி புயல்,  அந்த புயல் எல்லாம் பாத்தீங்கன்னா….  6 லட்சம் மரம் சென்னை மாநகரத்தில் சாஞ்சு போச்சு…  ஒரு இடத்துல இருந்து மற்ற  இடத்துக்கு போக முடியல….  மரங்கள் எல்லாம் சாய்ந்து,  சாலைகள் எல்லாம் போக முடியாத சூழ்நிலை….

அப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட மக்களுக்கு தேவையான உதவிகளை செஞ்சோம். மின் கம்பங்கள் பல வார்தா புயலில் பாதிக்கப்பட்டது. இதையெல்லாம் உடனுக்குடன் சரி செய்து,  மின்சார வசதி செய்து கொடுத்தோம். இன்னைக்கு விடியா திமுக ஆட்சியில் பல இடங்களில் இரண்டு நாட்களாக மின்சாரம் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். எதுக்கு நிறுத்தி வைத்து இருக்கின்றார்கள் ? என்றால், மின்சாரம் கொடுத்தால் மக்கள் ஊடகத்தை எல்லாம் பார்ப்பார்கள்… இந்த ஆட்சியின் லட்சணத்தை பார்ப்பார்கள்… அதனால் மின்சாரத்தை தடை செஞ்சி வச்சி இருக்காங்க…

ஏற்கனவே அண்ணா திமுக ஆட்சியில் சென்னை மாநகரம் முழுவதும் கேபிள் பதித்து வைத்துள்ளோம். அதனால் எங்கேயுமே தடை இல்லை.  தாராளமா மின்சாரத்தை கொடுக்கலாம். தடை  இல்லாமல் கொடுக்கலாம். ஆனால்  தடையெல்லாம் மின்சாரத்தை கொடுத்தா ? எல்லா மக்களும் தொலைக்காட்சியில் பார்ப்பாங்க….  அப்போ சென்னை மாநகரம் தண்ணீரில் மிதப்பதை எல்லாம் பார்ப்பாங்க.

அதனால இப்ப அதை பார்க்க கூடாது என்பதற்காகவே இன்றைய முதலமைச்சர்… மின் இணைப்பை துண்டித்து இருக்கின்றார்கள்… இன்னும் மின்சாரம் வழங்கப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. அதேபோல கஜா புயலை பார்த்தோம், நிபர் புயல் பார்த்தோம். புரேவி புயல் பார்த்தோம். இவ்வளவு புயலையும் கண்ட அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம். எல்லாம் புயலிலும் மக்களுக்கு தேவையான நன்மைகளை செய்து,  பெயர் வாங்கிய அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம் என தெரிவித்தார்.