வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சரை சந்தித்தார் பிறகு தமிழக முதலமைச்சர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் அனைத்து துறை செயலாளர்கள் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர் அதன்பிறகு தமிழக முதல்வரும் மத்திய உள்துறை அமைச்சரும் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர் அதில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்,

சென்னை நகரமும்,  மக்களும் இயல்பு நிலைக்கு வர தொடங்கி இருக்கிறார்கள். இந்த பெரும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கு உதவுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையிலேயே தமிழக அரசு எடுத்து வருகிறது. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்,  சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள்,  தன்னார்வலர்கள் என அனைவரும் இணைந்து களப்பணி ஆற்றி  வருகிறோம்.

தமிழ்நாடு அரசு எடுத்து இருக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாளால் இத்தகைய பெரு மழையில் உயிரிழப்பு பெரிய அளவில் தவிர்க்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  சாலைகள், பாலங்கள், கட்டடங்கள் போன்ற  பொதுகட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சீர் செய்வதற்கும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் ஏதுவாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 5060 கோடி ரூபாயை வழங்கிடுமாறு மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களுக்கு ஏற்கனவே நான் கோரிக்கை வைத்திருக்கிறேன்.

அதனை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக இன்று 450 கோடி தந்ததற்கு மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிப்புகள் குறித்து மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுக்கும்,  ஒன்றிய அரசு அலுவலர்களுக்கும்,  தலைமை செயலாளர்கள்  தமிழ்நாடு அரசு இதனை விரிவாக எடுத்து வைத்திருக்கிறார்கள். நமது கோரிக்கை குறித்து கோரிக்கை மனு ஒன்றையும் ஒன்றிய அமைச்சருக்கு அளித்திருக்கிறேன்.

இழப்பீடுகளை மதிப்பீடு செய்திட ஒன்றிய அரசின் குழு ஒன்றை விரைவில்   தமிழ்நாடுக்கு வர இருக்கிறது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையின் மீது பரிசீலித்து உரிய நிதி உதவியை ஒன்றிய அரசு விரைவில் வழங்கிட வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் அவர்கள் உறுதியளித்திருக்கிறார்கள்.  நிவாரண பணிகளை முழுவீச்சில் தொடர்ந்து மேற்கொண்டு அனைத்து பகுதிகளிலும் இயல்பு நிலைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை தமிழ்நாடு தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.