கலை உலகில் ரியலிஸ்டிக் ஆர்ட் என்பதற்கு ஒரு தனி இடம் இருக்கு. இதில், உண்மை வாழ்க்கையைப் போலவே ஒரு ஓவியம் உருவாகும். சாதம், பருப்பு, சப்பாத்தி, குழம்பு, இனிப்பு என உணவுப் பந்தி ஒன்று தரையில் பரிமாறப்பட்டுள்ளது போல ஒரு ஓவியம், இப்போது இணையத்தில் வைரலாகி மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த ஓவியத்தைக் கண்ட பலர் உண்மை உணவா என குழம்பிவிட்டனர்.
View this post on Instagram
வீடியோவில் ஒரு கலைஞர் தரையில் உட்கார்ந்து வண்ணங்களுடன் வேலை செய்கிறார். ஆரம்பத்தில் யாருக்கும் புரியவில்லை அவர் என்ன செய்கிறார் என்று. ஆனால் சில நிமிடங்களில், அவர் வரைந்ததைப் பார்த்ததும், உணவுப் பந்தி போலத் தெரியும் ஓவியம் முழுமையாகக் காட்சியளிக்கிறது. நிஜ உணவுகளைப் போலவே அந்த ஓவியம் இருந்ததால், பார்த்தவர்கள் வாயடைத்து போனார்கள்.
இந்த வீடியோ ‘\_timepass\_789’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்த்து, “பசியே வந்துடிச்சு”, “உணவா, ஓவியமா என யோசிக்க வைக்குது” எனக் கமெண்ட் செய்து வருகிறார்கள். “இந்த மாதிரியான கலைஞர்களின் முயற்சிக்கு கண்டிப்பாக வாழ்த்துகள் சொல்லணும்” என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.
