செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன்,  நான் இந்த இடத்தில் இருப்பவன்… என்  இனத்திற்காக கத்திபாராவில் நின்னேன்…  ஜல்லிக்கட்டில் நின்னேன்… அடிச்சு ரத்தம் சிந்துபோதும் கூட பின் வாங்கல…. இது நான் மட்டுமல்ல,  இந்த இனத்தை…. பெரும் வரலாற்றை நேசிக்கின்ற எவனாக  இருந்தாலும் பின்வாங்க முடியாது…. அப்படித்தான் என் அடுத்தடுத்த தலைமுறையும் வரும்…. அதனால்  இழந்த இழப்புகள் எல்லாம் வலியை சுமந்துகிட்டு…. ஓடிப்போய் பதுங்கி இருக்காது.

அது பாய்கிற காலம் திரும்பி வந்ததுன்னா…. யாராலும் தாங்க முடியாதுங்கறது தான்…. அதனால் இந்த உலகம் நேர்மையோடு இயங்கட்டும்.  இந்த உலகத்தில் எந்த இனமும் சிந்தாத  அளவிற்கு… ஒரு விடுதலைப் போராட்டத்தில் நேர்மை கொண்டு போராடி….. அதிகப்படியான இரத்தத்தை சிந்தன ஒரு இனம் தமிழினம்…. அந்த ரத்தத்திற்கு…. அந்த பேரிழப்பிற்கு…. நாங்கள் திரும்பி பழி வாங்கணும்னு நினைக்கல….

துவாரகாவினுடைய வருகை பழிவாங்கவே அல்ல… எங்களுடைய உயிர் போய் இருக்கலாம்….. எங்களுடைய நிலம் போய் இருக்கலாம்…. எங்களுடைய மானம் போயிருக்கலாம்….. எல்லாம் போய் இருக்கட்டும்….. எங்களுக்கு எங்களின் உரிமையை கொடுங்க….  இந்த உலகத்துகிட்ட அதை தான் கேட்கிறோம்….

கிடைச்சாலும் கூட… துவாரகா வந்தாலும் கூட…. துவாரகா சொன்ன மிக முக்கியமான ஒரு வார்த்தை,  தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல…. தமிழீழ   மக்களுக்கு மட்டுமல்ல…. சிங்கள மக்களுக்கும் நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்று சொன்ன வார்த்தையை,  இந்த உலகம் புரிஞ்சுக்கணும்…. இந்தியா புரிஞ்சுக்கணும்…. சிங்களத்தில் இருக்கிற அறிவுப்பூர்வமான அடுத்த தலைமுறை புரிஞ்சிக்கணும்….  அதனால் துவாரகாவினுடைய வருகை என்பது எங்கள் இனத்தை எதிரியை வீழ்த்த அல்ல  மீண்டும் எங்கள் இனத்தை தலை நிமிர்ந்த என கூறினார்.