தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெய்த தொடர் கடமையாள் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த நான்கு மாவட்டங்களில் புயல் காரணமாக அரசு பள்ளிகள் சேதமடைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து அந்த பள்ளிகளை சீரமைக்கவும் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் தலா 25 லட்சம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் டிசம்பர் 11 முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.