பெட்ரோல் டீசல் விலையை குறைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இது சாத்தியமா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி,

யாரு குறைக்க முடியும் ? இவங்களா ஆட்சிக்கு வந்து குறைக்க முடியும்.  இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர போகுதா ? குறைக்க போறாங்களா ? அதெல்லாம் நடக்காது. ஏற்கனவே இவர்கள் ஆட்சிக்கு வந்த போது 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது,  தேர்தல் அறிக்கையில் என்ன வெளியிட்டாங்க ? பெட்ரோலுக்கு 5 ரூபாய் குறைப்பேன்னு சொன்னாங்க… முழுசா குறைச்சாங்களா ? ஒரு சிறிய அளவுதான் குறைச்சாங்க.

டீசலுக்கு 4 குறைப்போம் என சொன்னாங்க….  காற்றோடு போய்விட்டது..  இதுவரைக்கும் குறைச்சங்களா ? இன்றைக்கு மாநில அரசு போடுகின்ற வரியை குறைச்சலே, ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் , டீசல் 12 ரூபாய் குறையும். அதை முதலில் குறைக்க சொல்லுங்க. அதை குறைக்க மாட்டேங்குறாங்களே… இவர்களுக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில்,  வரி குறைப்பு செய்தால் மக்கள் பயன்பெறுவார்கள். ஆகவே இவர்கள் ஆட்சிக்கு வரப்போதும் இல்ல… மத்தியில இவர்கள் வெற்றி பெறப்போவதும் இல்லை… இவர்கள் கொடுக்கின்ற அறிவிப்பு வெற்று   அறிவிப்பா தான் பார்க்கப்படும் என தெரிவித்தார்.