சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கண்களைக் குளமாக்கிய அந்த வீடியோவின் சுவாரஸ்யத் தகவல்கள் இதோ:
பள்ளி விழாவிற்காக அந்தச் சிறுமி பளபளக்கும் அழகான உடையணிந்து, தலை அலங்காரம் செய்துகொண்டு ஒரு தேவதை போலத் தயாராகியுள்ளார்.
Daughter Visits Dad At Work Place To Show How She Dressed Up For School Function. “But he Avoids Hugging To Keep Her Dress Neat.” pic.twitter.com/yjM0iMO5gn
— rareindianclips (@rareindianclips) February 8, 2026
அந்தச் சிறுமியின் தந்தை ஒரு தொழிற்சாலையில் (Factory) கடும் உழைப்பில் ஈடுபட்டுள்ளார். சத்தம் நிறைந்த இயந்திரங்களுக்கு நடுவே, வியர்வையும் தூசியுமாக அவர் வேலை செய்துகொண்டிருந்தபோதுதான், அவரது மகள் அங்கு வந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
மகளைப் பார்த்ததும் அந்தத் தந்தையின் முகம் ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தில் பிரகாசித்தது. முகமூடியைக் கழட்டிவிட்டு ஓடி வந்தவர், மகளைக் கட்டிப்பிடிக்க ஆசைப்பட்டார். ஆனால், ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டார்.
தனது வேலை உடையில் இருக்கும் அழுக்கு மகளின் அழகான உடையில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக, அவளைக் கட்டிப்பிடிக்காமல் சற்றுத் தள்ளி நின்றுகொண்டார். பதிலாக, மகளின் கன்னத்தில் மட்டும் லேசாக முத்தமிட்டுத் தனது பாசத்தை வெளிப்படுத்தினார்.
