சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கத்தைப் பற்றிய மக்களின் பார்வையை மாற்றியுள்ளது.
இந்த வீடியோவில், ஒரு சிங்கம் எருமை மாட்டை வேட்டையாட முயல்கிறது, ஆனால் எருமை தனியாக இல்லாமல் தனது கூட்டத்துடன் இருப்பதை கண்ட சிங்கம் அதிர்ச்சியடைகிறது.
<a href="http://
That was the first time I had ever seen a fully grown male lion way up in a tree 😂🦁
Look at him—trying his hardest to look majestic while hiding to save his life! 😂 pic.twitter.com/0nI7CYXF84
— Beauty of music and nature 🌺🌺 (@Axaxia88) February 6, 2026
“>
ஆக்ரோஷமான எருமைக் கூட்டம் சிங்கத்தைச் சூழ்ந்து தாக்கத் தொடங்கியவுடன், பயந்துபோன சிங்கம் தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது விறுவிறுவென்று ஏறி தப்பிக்கிறது.
வழக்கமாகச் சிங்கங்கள் மரங்கள் ஏறுவது அரிது என்பதால், இந்த காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.சுமார் 22 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டு, ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.
சிங்கத்தின் இந்தச் செயலைப் பார்த்த நெட்டிசன்கள், “வலிமையை விட சமயோசித புத்தி தான் முக்கியம்” என்றும், “உயிரோடு இருப்பதே உண்மையான வெற்றி” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காட்டில் வெறும் பலம் மட்டும் போதாது, ஒற்றுமையும் புத்திசாலித்தனமுமே ஒருவரை ஆபத்திலிருந்து காப்பாற்றும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
