டெல்லியில் உள்ள சைனிக் ஃபார்ம் (Sainik Farm) பகுதியில் ஒரு பெரிய கோடீஸ்வரரின் வீட்டிற்கு ஜோமேட்டோ டெலிவரி ஊழியர் ஒருவர் ஆர்டர் கொண்டு சென்றுள்ளார்.

அந்த உணவின் மொத்த விலை 883 ரூபாய். ஆனால், அந்தப் பெரிய வீட்டு வாடிக்கையாளரோ 880 ரூபாயைக் கொடுத்துவிட்டு, “மீதி 3 ரூபாய் சில்லறை இல்லை” என்று அசால்ட்டாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஊழியர், தனது வேதனையை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். அதில், “விஷயம் 3 ரூபாய் சில்லறை பற்றியது அல்ல. இவ்வளவு பெரிய கோட்டை போன்ற வீட்டில் வாழ்பவர்களிடம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் கூடவா சில்லறை இருக்காது? எங்களிடம் சில்லறை இல்லை என்றால் ‘டிப்ஸ்’ என்று விட்டுவிடலாம்,

 

View this post on Instagram

 

A post shared by shanidev42 (@shani_dev42)

ஆனால் எங்களைப் போன்ற ஏழைகளிடம் ஏன் சில்லறையைப் பறிக்கிறீர்கள்? இப்படி ஒவ்வொரு ரூபாயாகக் கஞ்சத்தனம் செய்துதான் இவ்வளவு பெரிய பங்களாக்களைக் கட்டுகிறீர்களா?” என உருக்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“நாங்கள் ஒரு ரூபாய் கூட ஏன் எங்கள் பாக்கெட்டில் இருந்து கொடுக்க வேண்டும்?” என்ற அவரது நியாயமான கேள்வி இப்போது சமூக வலைதளங்களில் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.