சமையல் அறையில் புதுமை புகுத்த நினைப்பவர்களுக்கு இந்த வீடியோ ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, தற்போது இணையத்தையே அதிர வைத்துள்ளது.

சாதாரணமாகச் சப்பாத்தி சுடத் தெரிந்தவர்களுக்குக் கூட, மாவைச் சரியான உருண்டையாக பிடிப்பது கொஞ்சம் வேலை இழுக்கும் காரியம். ஆனால், இந்த நபர் ஒரு சாதாரணக் கிண்ணத்தை வைத்துப் புதிய வித்தையைச் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Max-manthan (@maximum_manthan)

வீடியோவில் அவர்  பிசைந்த மாவிலிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்துத் தட்டில் வைக்கிறார். அதன் மேல் ஒரு காலி கிண்ணத்தைக் குப்புறக் கவிழ்த்து, தட்டோடு சேர்த்துச் சில நொடிகள் வேகமாகச் சுழற்றுகிறார்.

அவ்வளவுதான்,கிண்ணத்தை எடுத்தால் உள்ளே இருந்த மாவு துண்டு, கையில் உருட்டியதை விட மிக நேர்த்தியாக, வழவழவெனப்  உருண்டையாக மாறிக் கிடக்கிறது. இந்த எளிய முறையைப் பார்த்து வியந்து போன சுமார் 4 கோடியே 70 லட்சம் பேர் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர்.