எடிட்டிங்கா? இல்ல நிஜமா? எனப் பார்ப்பவர்களைக் குழப்பமடையச் செய்துள்ள அந்த வீடியோ இப்போது செம ட்ரெண்டிங்.

இன்ஸ்டாகிராமில் ‘danishsaifi32817’ என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோ இப்போது விவாதப் பொருளாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு வாலிபர் சாதாரண தெருவில் நடந்து வருகிறார்.

திடீரென அங்கிருந்த ஒரு இரண்டு அடுக்கு மாடி வீட்டைத் தனது ஒற்றைத் தலையில் லாவகமாகத் தூக்கிக் கொள்கிறார். இவ்வளவு பெரிய வீட்டைத் தூக்கிக் கொண்டு அவர் அசால்ட்டாகத் தெருவில் ஓடுவது பார்ப்பவர்களைத் திகைக்க வைக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Danish Khan (@danishsaifi32817)

ஆனால், அத்தோடு இந்த ‘அட்ராசிட்டி’ முடியவில்லை. அந்த வீட்டைத் தூக்கிக் கொண்டு ஓடும் வாலிபர், திடீரென அந்தரத்தில் பறக்கத் தொடங்குகிறார்.

அப்போது வானில் பறந்து கொண்டிருந்த ஒரு ஹெலிகாப்டர் மீது அந்த வீட்டைத் தூக்கி வீச, இரண்டும் மோதி நொறுங்கித் தெருவில் விழுகின்றன.

AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிக நேர்த்தியாக எடிட் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “தென்னிந்திய சினிமா இயக்குநர்களே இதைப் பார்த்து ஷாக் ஆகிடுவாங்க போலயே!” என்றும், “இப்படியே போனால் சீக்கிரமே AI-க்குத் தடை விதித்துவிடுவார்கள்” என்றும் வேடிக்கையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.