சமூக வலைத்தளமான எக்ஸ் (x) தளத்தில் குதிரை ஒன்று ஓடும் ரயில்களுக்கு இடையே சிக்கி நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

அதிவேகமாக வந்த ரயிலைக் கண்டு அங்கிருந்தவர்கள் சத்தமிட்டும், அந்தக் குதிரை பதற்றமடையாமல் தனது சமயோசித புத்தியால் தண்டவாளத்தில் லாவகமாக ஓடி உயிரைக் காப்பாற்றிக் கொண்டது. பார்ப்பதற்கே திக் திக் நிமிடங்களாக இருந்த இந்த வீடியோ, தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
<a href=”http://

“>
இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “குதிரை ஆபத்தில் இருக்கும்போது கூட மக்கள் உதவி செய்யாமல் வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்” என்று ஒருவர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “வாழ்க்கையில் நாம் இலக்கை நோக்கி ஓடும் வரைதான் உலகம் மதிக்கும், குதிரையைப் போலவே தடைகளைத் தாண்டி முன்னேறினால் தான் வெற்றி கிடைக்கும்” என ஒரு தத்துவத்தையே இதனுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.