தமிழகத்தில் திமுக-வுடன் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்காத நிலையில், காங்கிரஸ் மேலிடத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தமிழக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் அதிரடியாக ஒரு கடிதத்தை எழுதியுள்ளனர்.
அதில், வரவிருக்கும் தேர்தலில் வெறும் தொகுதிகளை மட்டும் வாங்கிக்கொண்டு ஒதுங்கிவிடக் கூடாது என்றும், தமிழக ஆட்சியில் தங்களுக்குப் பங்கு வேண்டும் என்றும், கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீண்ட காலமாகக் கூட்டணியில் இருந்தாலும் உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தில் எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதம், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
