விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இன்று நடைபெற்ற ‘மயானக் கொள்ளை’ திருவிழாவின் போது, எதிர்பாராத விதமாக போலீஸாருக்கும் பாமகவினருக்கும் இடையே மோதல் வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாசி மாத அமாவாசையை முன்னிட்டு அங்காளம்மன் கோயில் வீதிகளில் பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றபோது, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் இல்லம் அருகே ஒரு குழுவினர் திரண்டு நடனமாட முயன்றுள்ளனர்.
இதற்கு போலீஸார் தடை விதித்ததால், ஆத்திரமடைந்த தொண்டர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் மோதல் முற்றியதைத் தொடர்ந்து, கூட்டத்தைக் கலைக்க போலீஸார் அதிரடியாகத் தடியடி நடத்தினர்.
இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. திருவிழா கூட்டத்தில் நடந்த இந்த தடியடி சம்பவம் திண்டிவனம் நகர் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
