தமிழ் சினிமா உலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நானே வருவேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி திரைப்படத்தில் நடித்திருக்கின்றார் தனுஷ். இத்திரைப்படத்திலிருந்து வெளியான டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் வாத்தி திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அப்போது தனுஷ் பேசியுள்ளதாவது, என்னுடைய முதல் திரைப்படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது. என்னுடைய முதல் படம் என்பதால் ரசிகர்கள் எப்படி என்னை எடுத்துக் கொள்வார்கள் என எனக்கு பதற்றமாக இருந்தது. தற்போது நான் தெலுங்கில் அறிமுகமாக உள்ளேன். அதனால் அதே பதற்றம் தற்போதும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.