ஹாலிவுட் சினிமாவில் கடந்த 1960-70 காலக்கட்டங்களில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் ராக்வெல் வெல்ஷ்(82). இவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். தன் கதாபாத்திரங்கள் வாயிலாக ஹாலிவுட்டில் கவர்ச்சியின் எல்லைக்கு புது வரையறைகளை உருவாக்கிய ராக்வெல் வெல்ஷ், 1973ம் வருடம் த த்ரீ மஸ்கட்டீர்ஸ் படத்தில் நடித்ததற்காக கோல்டன் குளோப் விருதை வென்றார்.

இன்று வரை பல ஹாலிவுட் நடிகைகளுக்கு இவரது கதாபாத்திரங்கள் முன் மாதிரியாக அமைந்துள்ளது. இவர் நடித்த பெண்டாஸ்டிக் வாயேஜ், ஒன் மில்லியன் பி.சி, மைரா பிரெக்கின்ரிட்ஜ் ஆகிய திரைப்படங்கள் பெரும் புகழை தேடி கொடுத்துள்ளது. இதனிடையே ராக்வெல் வெல்ஷ்க்கு ஒரு மகனும்-மகளும் இருக்கின்றனர். அவரது மறைவுக்கு சர்வதேச அளவில் திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.