தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ். தி கிரே மேன் எனும் திரைப்படம் வாயிலாக ஹாலிவுட்டில் கால் பதித்திருக்கும் தனுஷின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் “வாத்தி”. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகயிருக்கும் இந்த படம் இன்று பிப்,.17ம் தேதி வெளியாகிறது. அதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் Captain Miller என்ற படம் திரைக்கு வருகிறது.

இதற்கிடையில் அதிக சம்பளம் வாங்கக்கூடிய தனுஷின் சொத்து மதிப்பு ரூபாய்.160 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோன்று சென்னையில் உள்ள தனுஷின் பங்களா ரூபாய்.25 கோடி இருக்கும் என்று கூறுகின்றனர். மேலும் பல இடங்களில் தனுஷ் நிலம் வாங்கி வைத்திருக்கிறாராம் என்று கூறப்படுகிறது.

நடிகர் தனுஷின் கார்கள்

#Jaguar XE- ரூ. 45 லட்சம்

# Ford Mustang- ரூ. 75 லட்சம்

# Bentley Continental Flying Spur- ரூ 3.40 கோடி

# Rolls Royce Ghost- ரூ. 7 கோடி

# Audi A8- 1.65 கோடி