Burgundy Private Hurun India 500 பட்டியலில் இடம்பெறும் நிறுவனங்களின் குறைந்தபட்ச மதிப்பு ரூ.6,000 கோடி ஆகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை சேர்ந்த 65 வயதான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 20 சதவீதம் குறைந்து 82 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. அவர் தொடர்ந்து 3-வது வருடமாக ஆசியாவின் பணக்காரர் எனும் பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்டார். அதானி குழுமத்தை சேர்ந்த 60 வயதான கௌதம் அதானி மற்றும் குடும்பத்தின் 35% சொத்து மதிப்பு குறைந்தது.

27 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்கள் உடன் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் 81 வயதான சைரஸ் பூனவல்லா, இந்தியாவின் 3-வது பணக்காரர் ஆவார். HCL டெக்னாலஜிஸின் 77 வயதான ஷிவ் நாடார், US$26 பில்லியன் சொத்துக்கள் உடன் 2023 M3M Hurun உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்து உள்ளார். அதோடு 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செல்வத்துடன் 72 வயதான லக்ஷ்மி என் மிட்டலின் குடும்பம் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

மேலும் 86 வயதான எஸ்பி ஹிந்துஜா மற்றும் குடும்பம் கடந்த வருடத்தை விட 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்து 20 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குவிந்துள்ளது. 17 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்கள் உடன் சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸின் 67 வயதான திலீப் ஷாங்வி மற்றும் குடும்பம் 7-வது இடத்தில் இருக்கிறது. 16 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்கள் உடன் டிமார்ட்டின் நிறுவனரான 67 வயதான ராதாகிஷன் தமானி மற்றும் குடும்பம் 40 இடங்கள் குறைந்து உலகளாவிய முதல் 100 இடங்களில் இருந்து வெளியேறி விட்டது.

ஆதித்யா பிர்லாவின் குமார் மங்கலம் பிர்லா மற்றும் குடும்பத்தின் சொத்து 22 சதவீதம் குறைந்துள்ளது. 2023 M3M Hurun Global Rich List-ல் அவரது சொத்து $14bn ஆக இருக்கிறது. ஜனவரி 2023-ல் குமார் மங்கலம் பிர்லா, வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கான தன் பங்களிப்புகளுக்காக பத்ம பூஷன் விருதை பெற்றார். 14 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்கள் உடன் கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் உதய் கோடக், இந்தியாவின் 10-வது பணக்காரராக இருக்கிறார். சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இந்தியாவின் 4வது பெரிய வங்கியின் நிறுவனரான உதய் கோடக், 2023 M3M Hurun Global Rich Listல் மூன்றாவது பணக்கார வங்கியாளர் ஆவார்.