ரயில்களின் ஏசி பெட்டிகளில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு ரயில்வேயானது பெட்ஷீட்கள், துண்டுகள் மற்றும் தலையணைகளை வழங்குகிறது. எனினும் தற்போதெல்லாம் பயணிகள் இந்த ரயில்வே பொருட்களை தங்கள் வீட்டிற்கு எடுத்து போகும் நிலையில், ரயில்வே துறை அதன் விதிகளில் சில மாதங்களுக்கு முன்பு பெரிய மாற்றத்தை செய்தது.

இனி பயணிகள் யாரேனும் பொருட்களை திருடினால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ரயில்வே தெரிவித்தது. பயணிகளின் இந்த செயல்களால் நடப்பு ஆண்டு ரயில்வே துறைக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பொருட்களை திருடுவது சட்டப்படி தவறு என்று ரயில்வே தெரிவித்து உள்ளது.

இது போன்ற பயணிகள் மீது ரயில்வே சொத்து சட்டம் 1966-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பயணிகளுக்கு அபராதம் மற்றும் தண்டனையும் விதிக்கப்படும். இத்தகைய குற்றம் செய்தோருக்கு அதிகபட்சம் 5 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.