செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன்,  இந்திய ஒன்றியத்தில் மட்டுமல்ல,  உலகம் முழுக்க மருத்துவத்தை ஆண்ட மாபெரும் உன்னதமான மருத்துவர்கள் எங்கள் தாய்மொழி தமிழில் படித்துவிட்டு மருத்துவரானவர்கள் தான்  உலகத்தையே ஆண்டுட்டு இருந்தாங்க. அது  இந்திய ஒன்றியத்துக்கு பொறுக்கவில்லை.  எந்த மாநிலத்திலும் கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சீட்டுகள். 10 ஆயிரத்தை  நெருங்கிவிட்டது.

இந்த அளவுக்கு மருத்துவ படிப்பு சீட்டு என்பது இந்தியா ஒன்றியத்தில் வேறு எங்கும் இல்லை. இதை தாங்கிக்க முடியாத இந்திய ஒன்றியம்,  சிபிஎஸ்சி உள்ளே கொண்டு வந்து, நீட்டை  உள்ளே கொண்டு வந்து, இன்னைக்கு வெள்ள வெள்ளையாக… இந்த மண்ணுக்கும் – இனத்துக்கும் – மொழிக்கும் சம்பந்தம் இல்லாத கூட்டம் இங்கு வந்து படிச்சிட்டு இருக்கு.  சமீபத்தில் ஒரு மாணவன் கதறி பேட்டி கொடுத்தான். நான் நீட்டுல்ல  படிச்சு மிகப் குறைந்த மார்க் வாங்கி,  25 லட்ச ரூபாய் லஞ்சம் கெட்டுத்தான் நான் சேர்ந்தேன் அப்படின்னு சொல்றான்.

அப்படின்னா… நீட் வந்ததுக்கு பிறகு,  இந்த மண்ணுல லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. நீங்க கோச்சிங் என்ற பெயரில் கொள்ளையடிக்கின்ற இந்த கூட்டம் இருக்குது இல்ல….  இந்த கூட்டம் எல்லாம் என்ன அங்கீகாரத்தோடு இங்கே  கொள்ளையடிச்சிட்டு இருக்கு. அப்போ இந்திய ஒன்றிய அரசு வேடிக்கை பார்குத்து, தமிழ்நாடு அரசு வேடிக்கை பாக்குது. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சொன்னாரு…  நாங்க ஆட்சிக்கு வந்துட்டோம்னா… ஒரு ரகசியம் இருக்கு.

முதல் கூட்டத்தொடரிலே நாங்கள் நீட்டை ஒழிப்போம்ன்னு சொன்னாரு.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் நீங்கள் கேளுங்கள்…  ஓட்டு வாங்கி கோட்டைக்கு போய் கொடியேற்றம்ங்குறதுக்காக…  நீங்க பொய்யான வாக்குறுதி கொடுத்துட்டு,  இன்னைக்கு எங்க வீட்டு பிள்ளைகள் செத்துக்கிட்டே இருக்கு. நீங்க வந்து மாலை போட போறீங்க. இன்னும் எத்தனை பிள்ளைகளுக்கு மாலை போட போறீங்க. இந்திய ஒன்றிய அரசு துரோகம் செய்யுது, மன்னிக்கவே முடியாத துரோகம் செய்யுது. அதற்கு மாற்று கருத்து இல்லை என தெரிவித்தார்.