செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்றத்தில் மணிப்பூர் சம்பவத்தை ஒட்டி எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்திலே நம்பிக்கை இல்லா கொண்டு வந்தார்கள். அந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திலே திருமதி கனிமொழி எம்பி அவர்கள் சில கருத்துக்களை சொன்னார். துரியோதனன் சபையில திரௌபதியை துச்சாதனன் துயில் உரித்த சம்பவத்தை மேற்கோள் காட்டி நாடாளுமன்றத்திலே கருத்துக்கள் தெரிவித்தார்.

1989 ஆம் ஆண்டு;

அதற்கு மத்திய நிதியமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள் 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வை குறிப்பிட்டு பேசினார். அதிலே எங்களுடைய இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அன்றைய தினம் எதிர்கட்சி தலைவராக இருந்தார். அப்போது நானும் சட்டமன்ற உறுப்பினராக அவருடன் பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன்.

நான் இருந்தேன்;

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் ஆசியோடு எடப்பாடி சட்டமன்றத்தில் வெற்றி பெற்று நான் அவையிலே அப்போது அங்கு இருந்தேன். அந்த சம்பவம் நடைபெற்ற போது நானும் அவையிலிருந்து பார்த்தேன் என்ற முறையிலே இதை நான் தெரிவிக்கிறேன். அந்த அவையிலே கொடூரமான முறையிலே…  ஒரு சட்டம்இயற்றுகின்ற மாமன்றத்திலே…

கருணாநிதி முன்னிலை:

அன்றைய முதலமைச்சர் திரு. கருணாநிதி முன்னிலையிலே பெண் என்றும் பாராமல்…  ஓர் எதிர்க்கட்சி தலைவர் என்றும் பாராமல் அம்மா மீது கொடூர தாக்குதல் நடைபெற்றது. திட்டமிட்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் சில கருத்துக்களை பேசிய போது தான் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது. அது எல்லாம் பத்திரிக்கையிலே வந்துள்ளது, மிக விளக்கமாக வந்துள்ளது.

அம்மா:

அதை ஒட்டி தான் மாண்புமிகு அம்மா அவர்கள் பேச முயற்சித்த போது…  இந்த கொடூரமான தாக்குதல், அன்றைய முதலமைச்சர் திரு கருணாநிதி முன்னிலையிலேயே நடந்தது. அன்றைய அமைச்சர்கள்,  திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மாவை கடுமையாக தாக்கினார்கள்.

திருநாவுக்கரசு;

அப்போது திரு. திருநாவுக்கரசு அவர்களும், திரு. K.K.S.S.R அவர்களும் அதைத் தடுத்தார்கள். அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். தடுத்துக் கொண்டிருக்கும்போது…  இப்போது இருக்கின்ற ஒரு மூத்த அமைச்சர் அம்மாவுடைய சேலையைப் பிடித்து இழுக்க…  சில சட்டமன்ற உறுப்பினர்கள்…  அன்றைய தினம் திமுக அமைச்சர்கள் அம்மா தலைமுடியைப் பிடித்து இழுக்க…  மிகப்பெரிய ஒரு கோரமான காட்சி சட்டமன்றத்திலே அரங்கேறியது.

கருப்பு தினம்:

அன்றைய தினம் கருப்பு நாள் என்று சொல்லலாம். 1989 மார்ச் 24 ஒரு கருப்பு தினமாக தான் இன்றைக்கும் பார்க்கப்படுகிறது. இன்றைக்கும் எனது மனதிலே அந்த நிகழ்வு இடம் பெற்றிருக்கிறது. அன்றைய தினம் நான் சட்டமன்றத்தில் இருந்த காரணத்தினால் இதை தெரிவிக்கிறேன். அப்படிப்பட்ட கொடுமையான நிகழ்வுகள் சட்டமன்ற வரலாற்றில் நடைபெற்றது இல்லை.

கொஞ்சைப்படுத்திட்டாரு:

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே மிக மோசமான நாள் என்று சொன்னால்?  1989 மார்ச் 24 தான் ஒரு மோசமான நாள். ஒரு கருப்பு தினம் என்று சொல்லலாம். இதுவரை சட்டமன்றத்தில் இப்படிப்பட்ட சம்பவம்…. பெண் சட்டமன்ற உறுப்பினருக்கு நடந்ததில்லை. ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு இப்படி நடந்தது கிடையாது. அப்படிப்பட்ட ஒரு கொடுமையான செயல் அரங்கேறியது சட்டமன்றத்திலே… ஆனால் இன்றைய முதலமைச்சர் அதை கொச்சைப்படுத்தி பேசுகிறார் என தெரிவித்தார்.