சமூக வலைதளங்களில் லைக்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காகப் பலரும் விபரீத விளையாட்டுகளில் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
அந்த வரிசையில், தண்ணீருக்கு வெளியே கரையில் படுத்திருந்த ஒரு முதலையிடம் இளைஞர்கள் சிலர் செய்த காரியம் பார்ப்போரை அதிர வைத்துள்ளது.
Prime example of Why women live longer than men?😭
pic.twitter.com/uVKvqgZWOL— Ghar Ke Kalesh (@gharkekalesh) January 19, 2026
வெளியான வீடியோவில், ஆற்றின் ஓரத்தில் ஒரு ராட்சத முதலை நன்றாகச் சாப்பிட்டுவிட்டுச் சுருண்டு படுத்துக் கிடக்கிறது. அதைப் பார்த்த சில இளைஞர்கள், பாலம் வழியாகக் கீழே இறங்கி மெல்ல மெல்ல முதலையின் அருகே செல்கின்றனர்.
எப்போதுமே முதலைகள் தங்கள் எல்லைக்குள் யாராவது வந்தால் ஆக்ரோஷமாகத் தாக்கும் குணம் கொண்டவை. ஆனால், இதைப்பற்றிச் சற்றும் கவலைப்படாத அந்த இளைஞர்கள், அசால்ட்டாக முதலையின் வாலையைப் பிடித்துத் தங்கள் பக்கம் இழுக்கின்றனர்.
முதலையின் பதில் தாக்குதல் எப்படி இருக்குமோ என்று வீடியோவைப் பார்ப்பவர்கள் பதறிக் கொண்டிருக்கும் வேளையில், அந்த முதலை மிரண்டு போய் மின்னல் வேகத்தில் தண்ணீருக்குள் ஓடி மறைந்தது.
“நல்லவேளை முதலை சாதுவா இருந்ததுனால தப்பிச்சீங்க, இல்லன்னா இந்நேரம் ஒரு கை காலு போயிருக்கும்” என நெட்டிசன்கள் அந்த இளைஞர்களைக் கிண்டலடித்தும், எச்சரித்தும் வருகின்றனர்.
