இணையத்தில் உலாவரும் வீடியோக்கள் சில நேரங்களில் நம்மைச் சிரிக்க வைப்பதோடு, நம் கடந்த கால நினைவுகளையும் தட்டி எழுப்பும். அந்த வகையில், தற்போது ஒரு தாய் தன் மகனைப் பள்ளிக்கு இழுத்துச் செல்லும் வீடியோ வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த வீடியோவில், “எனக்குப் படிப்பே வேண்டாம்” என அடம் பிடித்துக் கொண்டு தரையில் படுத்துக் கொள்ளும் சிறுவனை, அந்தத் தாய் சிறிதும் தயங்காமல் கையைப் பிடித்துத் தரதரவெனத் தரையிலேயே இழுத்துச் செல்கிறார்.

தாயின் பிடியில் இருந்து தப்பிக்கச் சிறுவன் போராடினாலும், “உன் எதிர்காலம் எனக்கு முக்கியம்” என்பது போலத் தாய் தன் பிடியைத் தளர்த்தவே இல்லை.

இந்த வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள், “எங்க அம்மாவும் இப்படித்தான் என்னைத் தூக்கிட்டுப் போவாங்க” எனத் தங்கள் பால்ய கால நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். கண்டிப்புக்கு பின்னால் ஒரு தாயின் அக்கறையும், பாசமும் ஒளிந்திருப்பதை இந்த வீடியோ நெகிழ்ச்சியுடன் உணர்த்துகிறது.