இயற்கை எப்போதுமே ஆச்சரியங்களும் ஆபத்துகளும் நிறைந்தது. பொதுவாக காடுகளுக்குள் மட்டுமே நாம் காணும் ராட்சத ராஜநாகம், இப்போது குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள ஒரு சாக்கடை கால்வாய்க்குள் புகுந்து வேட்டையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சுமார் 3 மீட்டர் நீளம் கொண்ட அந்த பிரம்மாண்ட பாம்பு, சாக்கடைக்குள் இருந்த ஒரு தவளையை லாவகமாகப் பிடித்து விழுங்குகிறது. அங்கிருந்தவர்கள் அதை வீடியோ எடுத்தபோதும், எதற்கும் அஞ்சாமல் தனது இரையை உண்பதிலேயே அந்த பாம்பு குறியாக இருந்தது.

“காட்டுல இருக்க வேண்டியது இங்க என்ன பண்ணுது?” என அந்தப் பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்த வீடியோவை இதுவரை ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர்.

“பாம்பு தவளையை சாப்பிடாம புல்லையா சாப்பிடும்?” என சிலர் கிண்டலாகக் கேட்டாலும், குடியிருப்புகள் அருகே இவ்வளவு பெரிய பாம்புகள் வருவது பொதுமக்களின் பாதுகாப்பிற்குப் பெரிய அச்சுறுத்தல் எனப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.