மறைந்த நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘சுந்தரா டிராவல்ஸ்’. இந்தப் படத்தில் வரும் பழைய பேருந்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இந்நிலையில், சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பேருந்தை நேரில் பார்த்த நபர் ஒருவர், அது தொடர்பான வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

​அந்தப் படத்தில் பேருந்து எப்படி இருந்ததோ, அதே அடையாளங்களுடன் இப்போதும் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பேருந்தின் உள்ளே இருந்த தண்ணீர் டேங்க், சைக்கிள் மற்றும் எலிப்பந்து போன்றவை அப்படியே இருக்கின்றன. ‘சுந்தரா டிராவல்ஸ்’ என்ற பெயர்கூட இன்னும் அழியாமல் அப்படியே உள்ளது. இருப்பினும், பராமரிப்பு இல்லாததால் அந்தப் பேருந்து தற்போது மிகவும் சிதிலமடைந்து, மோசமான நிலையில் காணப்படுகிறது.