பொங்கல் பண்டிகைக் காலங்களில் நடைபெறும் கோலப் போட்டிகளில், விதவிதமான அழகான கோலங்களைப் பார்ப்பது வழக்கம். ஆனால், அண்மையில் நடந்த ஒரு கோலப் போட்டியில், இளைஞர்கள் சிலர் வித்தியாசமான முறையில் கோலமிட்டுள்ளனர். சாதாரண கோலங்களுக்குப் பதிலாக, மாந்திரீகம் செய்யப் பயன்படுத்தப்படும் கோலத்தைப் போட்டு, அதன் நடுவே வைக்கோலால் செய்யப்பட்ட ஒரு பொம்மையை வைத்து, அதற்குப் பொட்டும் இட்டுள்ளனர். இந்த விசித்திரமான கோலம் பார்ப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும், தற்போது இது இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.
வீடியோவை காண
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் வேடிக்கையாகவும், ஆச்சரியமாகவும் பல கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். “கோலப் போட்டிக்கு பேய்க்கோலம் போட்டிருக்காங்க”, “அடுத்த ரவுண்ட்ல யாரும் வரக்கூடாதுன்னு இப்படி பயமுறுத்திட்டாங்களா?” என மீம்ஸ் மற்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. ஒரு சாதாரண கோலப் போட்டியைத் தங்கள் குறும்புத்தனத்தால் ஒரு திகில் கலந்த நகைச்சுவை நிகழ்வாக மாற்றிய இந்த இளைஞர்களின் காணொளி, தற்போது சமூக வலைதளங்களில் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
