சமூக வலைதளங்களில் லைக்ஸ் வாங்கவும், உலக சாதனை படைக்கிறேன் என்ற பெயரிலும் சிலர் செய்யும் விபரீதங்கள் பார்ப்போரை அதிர வைக்கின்றன.

அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று இணையவாசிகளின் தலை சுற்ற வைத்துள்ளது. ஒரு சாதாரண டூவீலரில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒட்டுமொத்தமாக ஏறிச் செல்லும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், அந்த பைக் சாலையில் சீறிப் பாய்கிறது. ஆனால் அதில் அமர்ந்திருப்பவர்களை எண்ணத் தொடங்கினால் உங்கள் மூளையே குழம்பிவிடும்.

 

View this post on Instagram

 

A post shared by مجتبى سالم (@qupye)

ஒரு ஆவரேஜ் குடும்பமே அந்த பைக்கில் அடைக்கலமாகி இருக்கிறது. பெட்ரோல் டேங்க் முதல் கேரியர் வரை எங்கு பார்த்தாலும் தலைகளாகத் தெரிகிறது.

இந்த ஆபத்தான பயணத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துப் பகிர, அது இப்போது பல லட்சம் பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.

“இது சாதனை அல்ல, சவக்குழிக்குச் செல்லும் பாதை” என நெட்டிசன்கள் பலரும் இந்தக் கண்மூடித்தனமான செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.