தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தங்கராஜ் தெருவில் குப்பன்(77) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைதால் பாதிக்கப்பட்ட குப்பன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்ற சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த குப்பன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.