காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் 53 விழுக்காடு மழை  பற்றாக்குறை நீடிக்கிறது என்று கர்நாடக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.  காவேரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் காவிரியில் இருந்து இதற்கு மேல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறது கர்நாடக அரசு.

ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது காவேரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் என்ன உத்தரவுகளை பிறப்பிக்கிறார்களோ,  அதை கடைபிடிக்க வேண்டும் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. அப்படி இருந்தும் கூட காவேரி ஒழுங்காற்று குழு சொன்ன பிறகும், இதற்கு மேல் எங்களால் தண்ணீர் திறக்க முடியாது என்று உறுதிப்பட கூறி இருக்கிறது கர்நாடக அரசு.