புதுச்சேரியில் இருக்கக்கூடிய பிரசதி பெற்ற  காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்தை போலி பத்திரம் தயாரித்து தனியார் நிறுவனத்திடம் விற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவில் நிர்வாகம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் நில அபகரிப்பில்  பொதுப்பணித்துறை அதிகாரிகள்,  தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடிய ஜான் குமார் மற்றும் அவரது மகன் ரிசர்ட் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் விசாரித்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி புதுச்சேரி சிபிசிஐடி காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள். அப்பொழுது இரண்டு எம்எல்ஏக்கள் தரப்பில் தாங்கள்  இந்த குற்றத்தில் ஈடுபடவில்லை.  நாங்கள் அப்பாவிகள். குறிப்பிட்ட அந்த சொத்து கோவிலுக்கு சொந்தமானது என நிரூபிக்கப்பட்டால், நாங்கள் கோவில் நிர்வாகத்திடமே ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அதேபோல் இரண்டு எம்எல்ஏக்கள் மீதான குற்றசாட்டுகள் நிரூபணமானால் தப்பிவிட முடியாது என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதுச்சேரி அரசு தரப்பில் இருந்து உத்திரவாதம் அளிக்கப்பட்டது. காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையை பார்த்த நீதிபதி,  கோவில் சொத்து தனியாருக்கு விற்கப்பட்டதில்  அரசு அதிகரிக்கும் தொடர்பு இருப்பதாக தெரிந்து அதிர்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட இவர்களுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டதை  நீதிபதி ஏற்றுக்கொண்டார். குறிப்பாக மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக்கூடிய எம்எல்ஏக்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவதை சகித்துக் கொள்ள முடியாது என்றும், ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார். பொது சொத்தாக இருக்கக்கூடிய கோவிலை பாதுகாக்க வேண்டியது எம்எல்ஏக்களாக இருக்க கூடிய மக்கள் பிரதிநிதிகளின் கடமை என்பதால்,

சம்மந்தப்பட்ட நிலம் கோவில் நிர்வாகம் என நிரூபணமானால் முறைப்படி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். கோவில் சொத்தை அபகரித்ததாக 2 MLA-க்கள் மீதான குற்றசாட்டு நிருபணமானால் CBCID விசாரணையை எதிர்கொள்ள முடியும்  என உத்தரவிட்டு,  வழக்கின் விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்திருக்கிறார்.