உத்திரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நாகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் சந்தவுலி பகுதியில் உள்ள கிராமத்தில் கனமழை காரணமாக நேற்று வீடு ஒன்றை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. களிமண் சுவரால் கட்டப்பட்ட இந்த வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிவ்முரட்(65) மற்றும் அவரது மகன் ஜெய்ஹிந்த்(35) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த இருவரை உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
