பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், பதிலடி கொடுக்கும் வகையில் மே 7ஆம் தேதி இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் மே 9-ம் தேதி ஒப்பந்தம் மூலம் போர் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் பெங்களூரில் இன்று விமானப்படை அதிகாரிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேசிய இந்திய விமானப்படை தளபதி ஏபி சிங் ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் மற்றும் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறினார்.

 

சுட்டு வீழ்த்தப்பட்ட மற்றொரு விமானம் AWCS என அழைக்கப்படும் வான்வழி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்பு விமானம் என்றும் அவர் தெரிவித்தார். இந்திய ராணுவம் வசம் உள்ள ரஷ்ய தயாரிப்பான எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பினால் இந்த வெற்றி சாத்தியமானது என்று கூறினார். மே 7 தாக்குதலின் போது பயங்கரவாத இலக்குகள் செய்வதமடைவதன் முன்னாள் இருந்த நிலை மற்றும் அதன் பின்னால் சேதமடைந்த நிலை ஆகியவற்றின் செயற்கோள் படங்களையும் அவர் திரையிட்டு காட்டினார். ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.