விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகி விக்ரமன். இவர் கடந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் கிருபா முனுசாமி என்பவர் தற்போது விசிக கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த நான் கடந்த 2020-ம் ஆண்டு லண்டன் சென்று சட்டத்துறையில் முனைவர் ஆராய்ச்சி படிப்பினை படித்து வருகிறேன்.

நான் ஜாதி ஒடுக்கு முறைக்கு எதிராக நீதிமன்றங்கள் மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். என்னை உங்கள் கட்சியை சேர்ந்த விக்ரமன் காதலித்தார். நான் லண்டன் சென்ற பிறகு என்னிடம் காதலை கூறிய விக்ரமன் கடந்த 3 வருடங்களாக நான் தலித் பெண் என்பதால் என் ஜாதியை சொல்லி என்னை அவமானப்படுத்துகிறார். இதுவரை என்னிடம் 12 லட்சத்துக்கும் மேல் விக்கிரமன் பணம் பறித்துள்ள நிலையில், ஜாதி ரீதியாக என்னை துன்புறுத்தி தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு என்னை தள்ளினார். நான் தற்போது சிகிச்சை பெற்று பழைய மன நிலைக்கு திரும்பியுள்ளேன்.

அவர் என்னை ஜாதி பெயரை சொல்லி அவமானப்படுத்தியதோடு விசிக-வில் உள்ள தலித் ஆண்களை வைத்து தங்கையையும், தாயையும் வன்புணர்வு செய்து விடுவேன் என்று என்னை மிரட்டினார். இது எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது.  நான் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க இருக்கிறேன். மேலும் கட்சி ரீதியாக நீங்கள் நடவடிக்கை எடுக்காமல் தலித் மக்களின் பாதுகாப்பிற்காக நிற்கும் உங்கள் கட்சியின் அடிப்படையில் அதைக் கேள்விக்குறியாக்கிவிடும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.