தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கி பிரபலமான மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் மாமன்னன் படத்திலிருந்து 2 பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா குறித்து அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (ஜூன் 1) சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மாமன்னன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறும் என இசை புயல் ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் மாமன்னன் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கதாக ஆகும்.