பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர் கான். இவர் நடிப்பில் வெளியான லால் சிங் தத்தா திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில் தற்போது சினிமாவை விட்டு தற்காலிகமாக விலகி இருக்கிறார். நடிகர் அமீர்கான் ஏற்கனவே ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ் ஆகியோரை திருமணம் செய்து கொண்ட நிலையில் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். நடிகர் அமீர் கானுக்கு தற்போது 58 வயது ஆகும் நிலையில் மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

நடிகை ராக்கி சாவந்தும் நடிகர் அமீர்கான் மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். இந்நிலையில் தங்கல் படத்தில் நடித்த நடிகை பாத்திமா சனா ஷேக்கை (31) நடிகர் அமீர்கான் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வரும் நிலையில் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் அமீர்கான் மற்றும் நடிகை சனா ஷேக் சேர்ந்து சுற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கூட தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.