பிரபல பஞ்சாபி நடிகை சோனம் பஜ்வா தமிழில் கப்பல் மற்றும் காட்டேரி போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலும் நடித்து வரும் சோனம் பஜ்வா தற்போது பாலிவுட் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பரபரப்பு புகாரினை தெரிவித்துள்ளார். அதாவது ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்த பிறகு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் மற்றும் சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடவும் அதிக வாய்ப்புகள் சோனம் பஜ்வாவுக்கு சென்றுள்ளது.

அப்போது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் லிப்லாக் காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளில் ஆபாசமாக நடிக்கும்படி துன்புறுத்தியுள்ளனர். அப்படி நடித்தால் தன்னுடைய இமேஜ் பாதிக்கப்பட்டு விடும் என்ற பயத்தில் ஹிந்தி பட வாய்ப்புகளை சோனம் பஜ்வா தவிர்த்துள்ளார். ‌ பஞ்சாபி திரை உலகில் நல்ல பட வாய்ப்புகள் வருவதோடு அங்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற அந்தஸ்தும் தனக்கு இருப்பதால் பஞ்சாபி திரை உலகில் தன்னுடைய இமேஜ் கெட்டு விடும் என்பதால் ஹிந்தி பட வாய்ப்பை நிராகரித்ததாக நடிகை சோனம் பஜ்வா கூறியுள்ளார்.