தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருப்பவர் சூரி. இவர் வெற்றிமாறனின் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து கூழாங்கல் படத்தை இயக்கிய பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி கொட்டு காளி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சூரி தன்னுடைய ரசிகரின் வீட்டிற்கு தற்போது ஆட்டோவில் சென்றுள்ளார். அதாவது ரசிகரின் தாயாருக்கு உடல் நலம் சரியில்லாததால் நடிகர் சூரி ஆட்டோவில் சென்று அவரின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். மேலும் தன்னுடைய பெயரில் தன் ரசிகர்கள் ஏராளமான உதவிகள் செய்து வரும் நிலையில் தன் ரசிகரின் அம்மாவை தன்னுடைய அம்மாவாக நினைத்து பார்க்க வந்துள்ளேன் என சூரி அவர்களிடம் கூறியுள்ளார்.