
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உலகத்திலே பொய் சொல்றதுக்குன்னு ஒரு அவார்டு கொடுக்கனும்னா நம்ம விடியா தி.மு.க அரசுக்கு தான் கொடுக்கணும். தேர்தல் வாக்குறுதியே 100 சதவீதம் நிறைவேத்திட்டாங்கன்னு சொன்னாங்க…. தேர்தல் வாக்குறுதியை நிறைவேத்திட்டாங்களா ? ஒன்னும் நிறைவேத்தல….. அது போல வடிகால் பனி 98 சதவீதம் நடந்துள்ளது என்பது காதில் பூ சுற்றுற கதை தான்.
4000 கோடி வந்து செலவு பண்ணீங்கன்னு சொல்றீங்க. அதனால என்ன இன்பாக்ட் ? என்ன தாக்கம் ? ஒரு இன்ஃபெக்ட்டும் இல்லையே… கொளத்தூர் தொகுதியில் இன்னைக்கு தண்ணி நிக்குது. ஆனால் இப்ப சொல்லுவாரு, அடுத்த மழைக்கு தண்ணீர் நிக்காது என்று… இந்த ஆட்சி இருக்கிற வரைக்கும் மக்களுக்கு கஷ்டம் தான்.
கலெக்டர் தன்னிச்சையா முடிவெடுக்க முடியுமா ? கல்லூரிக்கு விடுமுறை விடணும்ன்னா உயர்கல்வித்துறை கிட்ட கேப்பாரு… ஸ்கூலுக்கு விடுமுறை கொடுக்கணும்னா டைரக்டர் ஆஃப் ஸ்கூல் எஜுகேஷன் செக்ரெட்டரி கிட்ட கேப்பாங்க… ஸ்கூல் எஜுகேஷன் செயலாளர் , காலேஜ் எஜுகேஷன் செயலாளர் மினிஸ்டர் கிட்ட கேப்பாரு. மினிஸ்டர் சிஎம் கிட்ட கேட்பாங்க… இதுதான் பேசிக்.
மூணு நாள் தொடர்ச்சியா மழை வரும்னு வானிலை ஆராய்வு மையம் சொல்லி இருக்கு அப்படின்னு லீவு விடுவது தான் சரியான தீர்வு. அந்த அடிப்படையில் நாம் லீவ் விடுவோம் அப்படின்னு ஒரு முடிவு செஞ்சு அறிவிப்பாங்க. ஆனால் அரசு தூங்கி போச்சு. வானிலை ஆய்வு மையம் அறிக்கையை படிக்காமல் இவங்க பாட்டுக்கு காலேஜ் எல்லாம் திறந்து இருக்குன்னு சொன்னா…. எந்த விதத்தில் இந்த அரசு ஒரு விழிப்பா ? இருக்கிறது என நீங்க தெரிஞ்சுக்கணும் என தெரிவித்தார்.