பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிலிமிசை கிராமத்தில் பெரியசாமி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரியலூர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது பணியிட மாறுதல் காரணமாக பெரியசாமி தஞ்சாவூர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பொற்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரபாகர்(14) என்ற மகளும், பூங்குழலி(12) என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் கோவிலில் பால்குடம் எடுப்பதற்காக செல்வி தனது மகளுடன் சென்று விட்டார். பிரபாகரன் விளையாடுவதற்காக சென்றுவிட்டார்.

அந்த சமயம் வீட்டில் தனியாக இருந்த பெரியசாமி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெரியசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பணி சுமை காரணமாக பெரியசாமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சனை தான் காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.