இந்தியாவில் உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் வருகிற நவம்பர் 13 மற்றும் 20ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சியினரும் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியிருந்ததாவது, இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 21 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்றும், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்துடன் ரூபாய் 21,000 நிதி உதவி வழங்கப்படும் என்றும், பெண்களுக்கு மாதந்தோறும் 2,100 ரூபாய் வழங்கப்படும் என்றும், பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார்.