உத்தப் பிரதேச மாநிலம் ரோஷன்பூர் கிராமத்திற்கு அருகில் உள்ள சாலையில் லாரியும், ஆட்டோவும் இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க விலகி சென்றது. அப்போது லாரியும், ஆட்டோவும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். அதோடு 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விபத்தில் சிக்கிய லாரியை கைப்பற்றினர். இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்தநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.