கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ஆளுநர் வாரத்துக்கு ஒரு முறை இரண்டு முறை டெல்லிக்கு போய்ட்டு வராரு. அப்படி போகும்போது தயவுசெய்து டெல்லியில் வாதாடி… போராடி தேவையான நிதி வாங்கி கொடுத்தா நான் உங்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். இதுவரை மத்திய அரசு நிதி உடனே கிடைக்கும். ஆனால் இந்த வெள்ளத்துக்கு இதுவரை நிதி கிடைக்கவில்லை. அதற்கு நீண்ட விளக்கம் சொல்ல வேண்டும்.  சொல்லுகின்றேன்.  நல்ல கேள்வி கேட்டு இருக்கீங்க. நான் எதிர்பார்த்த கேள்வி இது. நல்ல விளக்கமாக சொல்லிடுறுதேன்.

ஒன்றிய அரசினுடைய நிதி பங்களிப்பு பற்றி ஒரு விளக்கம் சொல்றேன்.  இயற்கை பேரிடர் பேரிடர் காலங்களில் ஏற்படும் செலவுகளை சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநில பேரிடர் நிவாரண நிதி எஸ்.டி.ஆர்.எப் என்ற நிதி உள்ளது. எந்தெந்த மாநிலத்திற்கு இந்த நிதி எவ்வளவு என்பதை ஐந்தாண்டு காலத்திற்கு ஒருமுறை ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் நிதி குழு ( பைனான்ஸ் கமிஷன்) தீர்மானிக்கிறது.

இதன்படி தமிழ்நாட்டினுடைய எஸ்.டி.ஆர்.எப்-க்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி 1200 கோடி ரூபாய் ஆகும். இதில் 75% 900 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தர வேண்டும். 25% 300 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஏற்றிட வேண்டும். ஒன்றிய அரசின் பங்கானது ஆண்டுதோறும் இரு தவணைகளில் நமக்கு அளிக்கப்படுகின்றது.

அதாவது ரெண்டு தடவை தலா 450 கோடி ரூபாய்  நமக்கு அளிக்கப்படும்.  ஒரு இயற்கை பேரிடர் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் போது இந்த எஸ்.டி.ஆர்.எஃப் நிதி போதவில்லை என்றால் அந்த இயற்கை பேரிடரை கடும் இயற்கை பேரிடராக அறிவித்து…. தேசிய பேரிடர் நிவாரணை நிதியில் இருந்து என்.டி.ஆர்.எப் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.