பிரேசில் நாட்டின் சான்டா கட்டேரினா மாநிலத்தில் ஜூன் மாதம் கத்தோலிக்க செயின்ட்களை கொண்டாடும் விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் போது ராட்சத பலூன்களில் மக்கள் வானத்தில் பறப்பார்கள். அந்த வகையில் ராட்சத பலூன் பிரையா கிராண்டு என்ற பகுதியில் 29 பேருடன் பறந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென பலூனில் தீப்பிடித்ததால் பறந்து கொண்டிருந்த பலூன் மேற்பகுதி முழுவதுமாக எரிந்த நிலையில் தொட்டி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 21 பேர் காயமடைந்துள்ளனர். தற்போது காயமடைந்த மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் கடந்த வாரமும் ராட்சச பலூனில் பறந்து கொண்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 11 பேர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
View this post on Instagram
