நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பையில் மோதவுள்ள நிலையில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் இந்திய வீரர் அபிஷேக் சர்மாவை கடுமையாக விமர்சித்து ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேசிய அமீர், “அபிஷேக் சர்மா ஒரு சிறந்த பேட்ஸ்மேனே கிடையாது, அவர் வெறும் பந்துகளை அடித்து விளையாடும் ஒரு ‘ஸ்லாகர்’ (Slogger) தான். அவரிடம் முறையான கிரிக்கெட் தொழில்நுட்பம் (Technique) இல்லை. எட்டு இன்னிங்ஸில் விளையாடினால் ஒன்றில் மட்டுமே ரன் அடிப்பார், மற்ற போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட் ஆகிவிடுவார்.

அவரை வீழ்த்துவது ஒன்றும் பெரிய காரியம் இல்லை” என மிகத் திமிராகப் பேசியுள்ளார். டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஒரு வீரரை, ஒரு முன்னாள் வீரர் இப்படி தரம் தாழ்த்திப் பேசியிருப்பது இந்திய ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நலக்குறைவால் அபிஷேக் சர்மா நாளை விளையாடுவது சந்தேகமாக இருந்தாலும், அமீரின் இந்த பேச்சு களத்திற்கு வெளியே இப்போதே இந்தியா-பாகிஸ்தான் அனலை எகிற வைத்துள்ளது.