நாளை கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக்கோப்பை மெகா மேட்சுக்காக, இந்திய அணி நேற்று இலங்கை சென்றடைந்தது. அங்கு இந்திய வீரர்களுக்கு பாரம்பரிய முறைப்படி மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே மைதானத்தில் டென்ஷன் எகிறும், ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செம கூலாக அங்குள்ள கலைஞர்களின் தாளத்திற்கு ஏற்ப ‘குத்து’ டான்ஸ் போட்டு அசத்தினார். இதைப் பார்த்த சக வீரர் அக்சர் படேல் சிரிப்பை அடக்க முடியாமல் நெகிழ்ந்து போனார்.

மைதானத்திற்கு வெளியே எப்போதும் கலகலப்பாக இருக்கும் அர்ஷ்தீப், பாகிஸ்தான் அணிக்கு எதிராக பந்துவீச்சிலும் மிரட்டக் கூடியவர். இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 4 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ள அர்ஷ்தீப், நாளை நடக்கப்போகும் போட்டியிலும் அதே அதிரடியைத் தொடருவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.