சுமார் 19 ஆண்டுகளுக்கு முன்பு டர்பனில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக்கோப்பை போட்டி, கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ராபின் உத்தப்பாவின் அரைசதம் மற்றும் கேப்டனாக அறிமுகமான தோனியின் 33 ரன்கள் உதவியுடன் 141 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய பாகிஸ்தான் அணியும் மிஸ்பா-உல்-ஹக்கின் அதிரடியால் சரியாக 141 ரன்கள் எடுக்க, ஆட்டம் ‘டை’ (Tie) ஆனது. அந்தச் சமயத்தில் சூப்பர் ஓவர் முறை இல்லாததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க ‘பவுல் அவுட்’ (Bowl-out) முறை கடைபிடிக்கப்பட்டது.
#OnThisDay in 2007: 🇮🇳 vs 🇵🇰 and we bagged our first T20 World Cup win! 🥳
Who could forget that wild bowl-out? Legendary! 🤩#PlayBold #INDvPAK
pic.twitter.com/uqoSBoIwsi— Royal Challengers Bengaluru (@RCBTweets) September 14, 2024
இந்த விறுவிறுப்பான ‘பவுல் அவுட்’ சுற்றில் இந்தியாவின் சேவாக், உத்தப்பா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய மூவரும் ஸ்டம்பை துல்லியமாகத் தாக்கினர். ஆனால், பாகிஸ்தான் வீரர்கள் அப்ரிடி, உமர் குல் மற்றும் யாசிர் அராஃபத் ஆகிய மூவருமே இலக்கைத் தவறவிட்டனர். இதனால் இந்தியா 3-0 என்ற கணக்கில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. தோனியின் கேப்டன்சி பயணத்திற்கு ஒரு மாஸான தொடக்கமாக அமைந்த இந்தப் போட்டி, இன்றும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்த ஒரு த்ரில்லர் காவியமாகத் திகழ்கிறது.
