2026 டி20 உலகக் கோப்பையின் 27-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் மோதவிருக்கின்றன.

ஆனால், இலங்கையில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகக் கொழும்பில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, போட்டி தொடங்கும் மாலை 7 மணி அளவில் மழை பெய்ய 50% முதல் 65% வரை வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்படலாம் அல்லது ஓவர்கள் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டிக்கு ‘மாற்று நாள்’ (Reserve Day) கிடையாது என்பதால், ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.