கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானை கடந்த ஒரு மாதமாக உலா வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து இதுவரை அந்த யானை விவசாயியான அம்மாசி, டிரைவர் கோவிந்தராஜ், காவலாளி மாரி, அண்ணாதுரை ஆகியோரை மிதித்தது.

நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை வாழை, முட்டைக்கோஸ் ஆகிய பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது. எனவே அட்டகாசம் செய்யும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.