ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 98 ரன்களும், மிட்சல் 52 ரன்களும் எடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்‌.

இதில் ஹெட் 13 ரன்களும், அபிஷேக் ஷர்மா 15 ரன்களும் எடுத்து அவுட் ஆன நிலையில் அடுத்ததாக களம் இறங்கிய அன்மோல் பிரீத் சிங் டக் அவுட் ஆனார். ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக மார்க்ரம் 32 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை தரப்பில் துஷார் தேஷ்பாண்டே அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகள் எடுத்தார். மேலும் இதன் மூலம் ஹைதராபாத்தை வீழ்த்தி 72 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.