வரதட்சணை புகாரை விசாரிக்க காவல் நிலைய ஆய்வாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குமரியை சேர்ந்த உதய சந்தியா என்பவர் தாக்கல் செய்த மனுவில் வரதட்சனை கொடுமை தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் புகாரை விசாரிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவினை விசாரித்த நீதிபதி சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதனை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்குமாறு கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கை விசாரணை செய்ய நேர்மையான போலீஸ் அதிகாரியிடம் ஆவணங்களை ஒப்படைக்க மாவட்ட எஸ்பிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
